Thursday, December 24, 2009

என் பள்ளிக்காலத்தில் பிரபலமான பாடல்கள்

என்னுடைய முதல் இடுகைக்கு ஓட்டுகள் போட்டவர்களுக்கு மிக மிக நன்றி. அடுத்த இடுகை என்ன போடலாம் என்று நினைத்த பொழுது என்னுடைய பள்ளிகாலத்தில் நான் ஆடிய பாட்டுக்கள் மற்றும் மற்றவர்கள் ஆடிய பாட்டுகள் பற்றி கூறலாம் என்று நினைத்தேன். இந்த பாடல்கள் அனைத்தும் அப்பொழுது மிகவும் பிரபலமான பாடல்கள் ... இப்பொழுதும் இந்த பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் பிடிக்கும் ... என்னுடைய ஐ பாட் இல் அடிக்கடி கேட்கும் பாடல்கள் இவை ...


  1. படம்: வெற்றிகரங்கள் பாடல் : நள்ளிரவு மெல்ல மெல்ல ..... பாடல் கேட்கஇங்கு கிளிக் செய்யவும். இந்த பாடலுக்கு என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினார்கள். இப்போது கேட்டாலும் இந்த பாடல் தலையாட்ட வைக்கும். கேட்டு பாருங்களேன்.
  2. படம்:பொன்மன செல்வன் பாடல்:நீ பொட்டு வச்ச .. இந்த பாடல் அப்போது மிகவும் பிரபலம் ..இந்த பாடலுக்கு நடனம் ஆடி முடித்ததும் பயங்கரமான கை தட்டுகள் ஏன்னா ஐந்தாம் வகுப்பு பசங்க சும்மா பிச்சு உதறிட்டாங்க .. பாடலை இங்கு கேட்கவும் .
  3. படம்: வால்ட்டர் வெற்றிவேல் பாடல்: பட்டு நிலா மெட்டு எடுத்து ..இந்த பாடல் இப்போ கேட்டால் இது பிரபலமான பாடல என்று தோன்றும் ஆனால இது அந்த காலத்தில் ஆண்டு விழாக்களில் சக்கை போடு போட்ட பாடல் ....நான் இந்த பாட்டுக்கு ஆடி ஆடியன்ஸ் எல்லாரும் ஒன்ஸ் மோர் கேட்ட பாடல் ....
  4. படம்: அஞ்சலி பாடல்: வானம் நமக்கு வீதி .... இந்த படத்தில் மற்ற எல்லா பாடல்களையும் மற்ற வகுப்பு டீச்சர்ஸ் எடுத்துகொள்ள எங்க டீச்சர் போய் சண்டை போட்டு இரவு நிலவு பாட்டு கொடுங்கள் என்று கேட்க அவர்கள் முடியாது என்று சொல்ல பிறகு நான் இந்த மிச்ச பாட்டை நான் எப்படி டான்ஸ் ஆட வைக்கிறேன் பாருங்கள் என்று சவால் விட்டு மேடையை சும்மா அதிர வைத்து கை தட்டு வாங்கின பாடல்... நான் நிறைய பாராட்டும் வாங்கின பாடல் .. எங்க டீச்சர் க்கு ஒரே பெருமை போங்க.... ஆனா இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தில் இந்த பாடல் தான் முதலில் பிடிக்கும் ... உண்மையாகவே மத்த ஹிட் பாடல்களை விட இந்த பாடல் நன்றாக இருப்பது போல் தோன்றியது...
  5. பாடல்:ஹவா ஹவா .. என்ன படம் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த பாடல் பயங்கரமான ஹிட் ... இதிலே ஒரு விஷேசம் நான் தான் இந்த பாடலுக்கு நடனம் அமைத்தேன் .. அப்போது பத்தாம் வகுப்பு படித்ததால் அனுமதி கிடையாது ... இப்போவும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ..

நீங்களும் இதே போல் உங்களுடைய பள்ளி காலத்து ஆண்டு விழா நினைவுகளையும் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த பாடல்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். முதல் நான்கு பாடல்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசையல்லவா சொல்லவா வேண்டும் ...

என்னுடைய இரண்டாம் பதிவை படித்த அனைவருக்கும் நன்றி...

அருவி




3 comments:

  1. பள்ளி கால நினைவை அசை போடுவது என்பது மிக சுவாரஸ்யமான ஒன்று. இந்த பதிவும் அப்படியே...

    ReplyDelete
  2. உங்களுடைய ஊக்கத்திற்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சார்....

    ReplyDelete
  3. 'ஹவா .. ஹவா...' பாடல், 1980 களில் ஹசன் ஜஹாங்கீர் என்ற பாகிஸ்தானி பாடகரால் பாடப்பட்ட புகழ்ப்பெற்ற பாப் இசைப்பாடல். தந்தை இரானியர், தாய் இந்தியர். இடப்பெற்ற படம் 'டான் - II' எனப்பட்ட லோ - பட்ஜெட் படம். மும்பையில் எடுக்கப்பட்ட இந்தப் பாடலில் ஷாருக் கானின் வீடும் வருவதாகக் கேள்வி. இதில் நடித்தவர் அனு மாலிக் என்ற இசை அமைப்பாளரின் தம்பி என்றுக் கூறப்பட்டது. பழைய நினைவுகளைக் கிளறி விட்டது உங்களின் பதிவு. நன்றி. ( மற்றும் மௌலி அவர்களின் flight 172 வீடியோவைக் காண இந்தப்பக்கத்திற்கு செல்லவும். http://video.google.co.uk/videoplay?docid=-4891455537713842964&ei=lqo6S6qjBNCr-Ab5-enABA&q=flight+172&hl=en# )

    ReplyDelete