Sunday, December 27, 2009

என் கல்லூரிக்காலத்தில் பிரபலமான படங்கள்

நான் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது பிரபலமான படங்கள் பற்றி கூறுகிறேன் ... கண்டிப்பாக நிறைய பேருக்கு சில படங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கும்..நீங்களும் நினைவு படுத்தி பாருங்களேன் .........


  1. பூவேலி : கார்த்திக் நடித்த படம் .....இது மிகவும் நன்றாக ஓடின படம் ... நண்பர்களாக இருந்து பிறகு கடைசியில் காதலர்களாக மாறி ..திருமணத்தில் முடியும் ஒரு நல்ல டிசென்ட் ஆன படம்.... எல்லா காட்சிகளும் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கும்.... ஒரு வேளை நாங்கள் கல்லூரி இல் படித்துக்கொண்டிருந்ததால் பிடித்ததோ என்னவோ.....


  2. கோகுலத்தில் சீதை - இதுவும் கார்த்திக் நடித்த படம்... ஒரு கொடுமை இந்த படம் தான் ஹாஸ்டல்ல அடிக்கடி போடுவாங்க ....எல்லாருடைய பேவரிட் படம் இது தான்...ஒரு விஷயம் அந்த டைம் ல ரஜினி,கமல் அவர்களுக்கு அடுத்து கார்த்திக் தான் நிறைய பேருக்கு பிடிக்கும்...


  3. காதல் தேசம் : பிரம்மாண்டமா எடுக்கப்பட்டபடம் ... நல்லா ஓடின படம் தான்னு நினைக்கிறேன் ... பாடல்கள் அனைத்தும் பயங்கரமான ஹிட்.....மற்றும் அந்த டைம் ல் அப்பாஸ் மேல நிறைய பேருக்கு கிரேஸ் இருந்துச்சு ...ஒரு பயங்கர காமெடி அந்த படத்த அப்பாஸ் க்காக நிறையதடவ பாத்தவங்க அடுத்த படத்துல மதிக்கவே இல்லை....ஒரே படத்துல நிறைய பேமஸ் ஆகி அடுத்த படத்துல டப்பா ஆன ஒரே ஹீரோ இவர் தான்


  4. காதலுக்கு மரியாதை , லவ் டுடே : இந்த இரண்டு விஜய் படங்களும் நன்றாக ஓடினவை....முதல் படம் பாசில் இயக்கமும் , ஹிட் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் கண்டிப்பாக ரகுவரன் நடிப்பும் முக்கிய காரணங்கள்........அப்போ என்னுடைய பிரெண்ட்ஸ் நிறைய பேர் விஜய் அன்புடன்ஆ இருந்தாங்க... இப்போ இல்லை ... நினைத்து பார்த்தால் எவ்வளவு மாற்றம்...ஆச்சரியம் தான்...


  5. அலைபாயுதே : சொல்லவே வேண்டாம் இந்த படத்தை பற்றி இப்பவும் எங்க பேவரிட் படம் இது....

இதை தவிர இன்னும் கொஞ்ச படம் இருக்கு அவை.....

  1. உள்ளத்தை அள்ளி தா
  2. காதல் கோட்டை
  3. ஜீன்ஸ்
  4. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
  5. படையப்பா
  6. சேது
  7. வாலி
  8. முதல்வன்
  9. அமர்க்களம்
  10. நீ வருவாய் என

மேலே சொன்ன படங்கள் எல்லாம் ஹிட் படங்கள் ...ஆனால் அடுத்த தடவை பாடல்கள் பற்றி சொல்லும்போது ஹிட் படப்பாடல்களை விட்டுவிட்டு கொஞ்சம் ஹிட் ஆன , ஹிட் ஆகாத படங்களில் இருந்து ஹிட் ஆன பாடல்களை பற்றி கூறலாம் என்று உள்ளேன்...

நீங்கள் படிக்கும்போது பிரபலமான படங்களை முடிந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன் ..

அன்புடன்
அருவி



Thursday, December 24, 2009

என் பள்ளிக்காலத்தில் பிரபலமான பாடல்கள்

என்னுடைய முதல் இடுகைக்கு ஓட்டுகள் போட்டவர்களுக்கு மிக மிக நன்றி. அடுத்த இடுகை என்ன போடலாம் என்று நினைத்த பொழுது என்னுடைய பள்ளிகாலத்தில் நான் ஆடிய பாட்டுக்கள் மற்றும் மற்றவர்கள் ஆடிய பாட்டுகள் பற்றி கூறலாம் என்று நினைத்தேன். இந்த பாடல்கள் அனைத்தும் அப்பொழுது மிகவும் பிரபலமான பாடல்கள் ... இப்பொழுதும் இந்த பாடல்களை கேட்கும் பொழுது மிகவும் பிடிக்கும் ... என்னுடைய ஐ பாட் இல் அடிக்கடி கேட்கும் பாடல்கள் இவை ...


  1. படம்: வெற்றிகரங்கள் பாடல் : நள்ளிரவு மெல்ல மெல்ல ..... பாடல் கேட்கஇங்கு கிளிக் செய்யவும். இந்த பாடலுக்கு என்னுடைய பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினார்கள். இப்போது கேட்டாலும் இந்த பாடல் தலையாட்ட வைக்கும். கேட்டு பாருங்களேன்.
  2. படம்:பொன்மன செல்வன் பாடல்:நீ பொட்டு வச்ச .. இந்த பாடல் அப்போது மிகவும் பிரபலம் ..இந்த பாடலுக்கு நடனம் ஆடி முடித்ததும் பயங்கரமான கை தட்டுகள் ஏன்னா ஐந்தாம் வகுப்பு பசங்க சும்மா பிச்சு உதறிட்டாங்க .. பாடலை இங்கு கேட்கவும் .
  3. படம்: வால்ட்டர் வெற்றிவேல் பாடல்: பட்டு நிலா மெட்டு எடுத்து ..இந்த பாடல் இப்போ கேட்டால் இது பிரபலமான பாடல என்று தோன்றும் ஆனால இது அந்த காலத்தில் ஆண்டு விழாக்களில் சக்கை போடு போட்ட பாடல் ....நான் இந்த பாட்டுக்கு ஆடி ஆடியன்ஸ் எல்லாரும் ஒன்ஸ் மோர் கேட்ட பாடல் ....
  4. படம்: அஞ்சலி பாடல்: வானம் நமக்கு வீதி .... இந்த படத்தில் மற்ற எல்லா பாடல்களையும் மற்ற வகுப்பு டீச்சர்ஸ் எடுத்துகொள்ள எங்க டீச்சர் போய் சண்டை போட்டு இரவு நிலவு பாட்டு கொடுங்கள் என்று கேட்க அவர்கள் முடியாது என்று சொல்ல பிறகு நான் இந்த மிச்ச பாட்டை நான் எப்படி டான்ஸ் ஆட வைக்கிறேன் பாருங்கள் என்று சவால் விட்டு மேடையை சும்மா அதிர வைத்து கை தட்டு வாங்கின பாடல்... நான் நிறைய பாராட்டும் வாங்கின பாடல் .. எங்க டீச்சர் க்கு ஒரே பெருமை போங்க.... ஆனா இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தில் இந்த பாடல் தான் முதலில் பிடிக்கும் ... உண்மையாகவே மத்த ஹிட் பாடல்களை விட இந்த பாடல் நன்றாக இருப்பது போல் தோன்றியது...
  5. பாடல்:ஹவா ஹவா .. என்ன படம் என்று எனக்கு தெரியாது ஆனால் இந்த பாடல் பயங்கரமான ஹிட் ... இதிலே ஒரு விஷேசம் நான் தான் இந்த பாடலுக்கு நடனம் அமைத்தேன் .. அப்போது பத்தாம் வகுப்பு படித்ததால் அனுமதி கிடையாது ... இப்போவும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ..

நீங்களும் இதே போல் உங்களுடைய பள்ளி காலத்து ஆண்டு விழா நினைவுகளையும் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த பாடல்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன். முதல் நான்கு பாடல்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசையல்லவா சொல்லவா வேண்டும் ...

என்னுடைய இரண்டாம் பதிவை படித்த அனைவருக்கும் நன்றி...

அருவி




Wednesday, December 23, 2009

முதல் இடுகை - பிடித்த படம் "பசங்க" ஒரு பார்வை

எல்லாரையும் பார்த்து நானும் எழுதுறேன் பாரு ப்ளாக்ன்னு ஆரம்பிச்சுட்டேன் ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல .. உஷ் இப்போவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. சரி.. மற்ற நல்ல நல்ல பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு என்னுடைய முதல் பதிவை ஆரம்பிக்கிறேன்..

முதலில் எனக்கு இந்த வருடம் மிகவும் பிடித்த படமான "பசங்க" படத்தை பற்றி என்னுடைய பார்வை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் ...


  1. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிக அருமை.. அன்புவின் பெற்றோரை பார்க்கும் போது எனக்கு சின்ன வயதில் என்னுடைய அம்மா அப்பா சண்டை போடும் போது அழுதது , படிக்காமல் பள்ளிக்கூடம் போய் அடி வாங்கியது நினைவுக்கு வந்தது... என்னை நானே பார்த்த மாதிரி இருந்தது..
  2. எனக்கு தம்பி இல்லை தங்கை மட்டும் தான் "புஜ்ஜிமா" மாதிரி அவளும் பயப்படவே மாட்டாள் எல்லாரயும் எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க அடிப்பேன் என்று கூறி அனைவரையும் மிரட்டுவாள்
  3. சரி என்னடா ஒரே சுய புராணமே இருக்கேன்னு பாக்குறீங்களா என்ன பண்ணுறது முதல் தடவை எப்படின்னு தெரியல...அப்புறம் பக்கடாவ பத்தி சொல்லாம விட்டுட்டா எப்படி.. எங்க வீட்டுல எப்பவும் அவனப் பத்தி தான் பேசுவோம் அவன் இல்லாட்டி அந்த படத்தில் சுவாரசியம் இருக்காது "நான் சொல்லல" "அது பேசுச்சு அது பேர் எழுதல அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுது" என்ன மாதிரி ஒரு டயலாக் டெலிவரி சூப்பர் போங்க ..
  4. அப்புறம் நம்ம சோபி கண்ணு , மீனாட்சி காதல் ... எப்பவும் ஒரே மாதிரி லவ் சீன் ஒரே மாதிரி குத்து பாட்டு படங்களுக்கு மத்தியில் தென்றல் மாதிரி படத்துக்கு நடுவில் வரும்.. என்னோட அப்பா கூட உட்கார்ந்து நெளியாம மிகவும் சந்தோசமாக ஒரு காதல் சீன் பார்த்தது அது இதுதான் ... அதுவும் என்னுடைய கணவர் சோபி கண்ணு பைத்தியம் ... எப்போ பாத்தாலும் சோபி வர சீன் மட்டும் பாத்துகிட்டே இருப்பார்.. "சும்மா சாம்பிராணி போடாத" இப்போ எங்கள் சாதாரண டயலாக் ஆகிடுச்சு...
  5. எந்த விதமான மேக்அப் போடாத முகங்கள் பாக்க .....நாமும் அவங்கள பக்கத்துக்கு வீட்டுல இருந்து பாக்குற மாதிரி இருந்துச்சு...
  6. எனக்கு பிடித்த ஒரு முக்கியமான விஷயம்ஒரே ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களில் யாருமே வாய் அசைத்து பாடமாட்டார்கள் ...நிஜத்தில் நாம் யாரும் அப்படி பாடி ஆட முடியாது...பின்னால் பாடல் ஓட காட்சி மட்டுமே இருக்கும் நான் மிகவும் ரசித்தது இதுதான்...
  7. யாரையும் விட முடியாது ... எல்லாரும் அதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றனர் ... அதிலும் விளையாட்டு போட்டி சீன் இன்றும் எல்லா கிராமங்களிலும் நடப்பது... நானும் சிறு வயதில் எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் நடக்கும் விளையாட்டு போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கிருக்கேன் (உண்மை தான் நம்பிடுங்க ..) அப்போ எனக்கு பிடிக்காத பிள்ளையை விட நிறைய பரிசு வாங்கனும்ன்னு நான் என்ன மாதிரி பயிற்சி எடுப்பேன் தெரியுமா... ம்ம் அதெல்லாம் ஒரு காலம்
  8. எல்லாமே இயல்பு என்று சொல்ல முடியாவிடிலும் மற்ற எல்லா திரைப்படங்களிலும் எவ்வளவு காட்சிகளை அதிகமான பில்ட் அப், இயல்பு மீறி டூ மச் ஆக தெரிந்தும் பார்த்து விட்டு வந்திருக்கிறோம் அதனால் இதில் வரும் சில காட்சிகளை என்னால் ஒத்துகொள்ளவே முடிந்தது
  9. முடிவில் ...எனக்கு என்னுடைய பள்ளி மற்றும் சிறு வயது நினைவுகளை அசை போட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது ..
  10. நிறைய சொல்ல நினைத்தேன் ஆனா எப்படி அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதென்று தெரியவில்லை .. சீக்கிரம் கற்றுக் கொள்கிறேன் ... பிழை இருந்தால் மன்னிக்கவும் ...

மிகவும் நன்றியுடன்

அருவி