Sunday, December 27, 2009

என் கல்லூரிக்காலத்தில் பிரபலமான படங்கள்

நான் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது பிரபலமான படங்கள் பற்றி கூறுகிறேன் ... கண்டிப்பாக நிறைய பேருக்கு சில படங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கும்..நீங்களும் நினைவு படுத்தி பாருங்களேன் .........


 1. பூவேலி : கார்த்திக் நடித்த படம் .....இது மிகவும் நன்றாக ஓடின படம் ... நண்பர்களாக இருந்து பிறகு கடைசியில் காதலர்களாக மாறி ..திருமணத்தில் முடியும் ஒரு நல்ல டிசென்ட் ஆன படம்.... எல்லா காட்சிகளும் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கும்.... ஒரு வேளை நாங்கள் கல்லூரி இல் படித்துக்கொண்டிருந்ததால் பிடித்ததோ என்னவோ.....


 2. கோகுலத்தில் சீதை - இதுவும் கார்த்திக் நடித்த படம்... ஒரு கொடுமை இந்த படம் தான் ஹாஸ்டல்ல அடிக்கடி போடுவாங்க ....எல்லாருடைய பேவரிட் படம் இது தான்...ஒரு விஷயம் அந்த டைம் ல ரஜினி,கமல் அவர்களுக்கு அடுத்து கார்த்திக் தான் நிறைய பேருக்கு பிடிக்கும்...


 3. காதல் தேசம் : பிரம்மாண்டமா எடுக்கப்பட்டபடம் ... நல்லா ஓடின படம் தான்னு நினைக்கிறேன் ... பாடல்கள் அனைத்தும் பயங்கரமான ஹிட்.....மற்றும் அந்த டைம் ல் அப்பாஸ் மேல நிறைய பேருக்கு கிரேஸ் இருந்துச்சு ...ஒரு பயங்கர காமெடி அந்த படத்த அப்பாஸ் க்காக நிறையதடவ பாத்தவங்க அடுத்த படத்துல மதிக்கவே இல்லை....ஒரே படத்துல நிறைய பேமஸ் ஆகி அடுத்த படத்துல டப்பா ஆன ஒரே ஹீரோ இவர் தான்


 4. காதலுக்கு மரியாதை , லவ் டுடே : இந்த இரண்டு விஜய் படங்களும் நன்றாக ஓடினவை....முதல் படம் பாசில் இயக்கமும் , ஹிட் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் கண்டிப்பாக ரகுவரன் நடிப்பும் முக்கிய காரணங்கள்........அப்போ என்னுடைய பிரெண்ட்ஸ் நிறைய பேர் விஜய் அன்புடன்ஆ இருந்தாங்க... இப்போ இல்லை ... நினைத்து பார்த்தால் எவ்வளவு மாற்றம்...ஆச்சரியம் தான்...


 5. அலைபாயுதே : சொல்லவே வேண்டாம் இந்த படத்தை பற்றி இப்பவும் எங்க பேவரிட் படம் இது....

இதை தவிர இன்னும் கொஞ்ச படம் இருக்கு அவை.....

 1. உள்ளத்தை அள்ளி தா
 2. காதல் கோட்டை
 3. ஜீன்ஸ்
 4. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
 5. படையப்பா
 6. சேது
 7. வாலி
 8. முதல்வன்
 9. அமர்க்களம்
 10. நீ வருவாய் என

மேலே சொன்ன படங்கள் எல்லாம் ஹிட் படங்கள் ...ஆனால் அடுத்த தடவை பாடல்கள் பற்றி சொல்லும்போது ஹிட் படப்பாடல்களை விட்டுவிட்டு கொஞ்சம் ஹிட் ஆன , ஹிட் ஆகாத படங்களில் இருந்து ஹிட் ஆன பாடல்களை பற்றி கூறலாம் என்று உள்ளேன்...

நீங்கள் படிக்கும்போது பிரபலமான படங்களை முடிந்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன் ..

அன்புடன்
அருவி7 comments:

 1. அட என்னங்க .. உங்க வயச அசால்டா இப்படி சொல்றீங்களே..

  நாங்களாம் யூத்து யூத்துன்னு சொல்லிட்டு சுத்துற கூட்டம் இன்னும் இங்க நெறயா இருக்குங்க,.

  ஆனாலும்
  உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு..

  ReplyDelete
 2. இந்த மாதிரி இன்னும் இன்னும் நெறயா எழுதுங்க...
  தொடர்ந்து எழுதுங்க..
  தோணுறதெல்லாம் எழுதுங்க..

  உங்க 50வது பதிவைப் படிச்சு பாருங்க.. கண்டிப்பா ஒரு மாற்றம் தெரியும்...

  :-)

  ReplyDelete
 3. இவையெல்லாம் உங்களுக்கு பிடித்த படம் அவ்வளவுதான்... மற்றபடி ஒன்றுமில்லை
  (உண்மையிலே)

  ReplyDelete
 4. @அண்ணாமலையான்---- ஹா ஹா ரொம்ப கரெக்ட் அண்ணாமலையான் sir ... இந்த பதிவில் ஒன்றுமே இல்லை... இந்த படம் எல்லாம் எனக்கு பிடித்த படம் இல்லை நான் படிக்கும்போது பிரபலமாக இருந்த படங்கள் ... அவ்வளவுதான் இப்போ இதை பார்க்கும் அனைவருக்கும் இதெல்லாம் ஒரு ஹிட் படமா என்று தோன்றும் அதற்காகதான் சொன்னேன்...மற்றபடி நீங்க சொன்ன மாதிரி இதில் ஒன்றுமே இல்லை ... நான் ஒத்துகொள்கிறேன்...

  ReplyDelete
 5. @கடைக்குட்டி.. என்ன சார் இப்படி சொல்லுறீங்க வயச சொல்லுறதுல என்ன ஆக போகுது ....உங்களுடைய கமெண்ட் ல இருந்து எனக்கு நிறைய விஷயம் தெரியுது... என்ன பண்ணுறது அட்லீஸ்ட் இபப்டி மொக்கை பதிவு எழுதினாவது நான் தமிழ் எழுதுவதை இம்ப்ரூவ் பண்ணிக்குவேன் ...இந்த காலத்துல எங்க எழுத சான்ஸ் கிடக்குது ... இங்கிலீஷ் தானே எல்லாமே...அதனால எப்படி மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை...

  ReplyDelete
 6. கடைக்குட்டி ... உங்க ப்ரொபைல் போட்டோ எனக்கு ரொம்ப பிடித்த போட்டோ :-)

  ReplyDelete
 7. summa-blog said...
  கடைக்குட்டி ... உங்க ப்ரொபைல் போட்டோ எனக்கு ரொம்ப பிடித்த போட்டோ :-)
  //

  அத என் ப்ளாக்ல வந்து சொல்லுங்க அக்கா.. :-)

  ReplyDelete