Wednesday, December 23, 2009

முதல் இடுகை - பிடித்த படம் "பசங்க" ஒரு பார்வை

எல்லாரையும் பார்த்து நானும் எழுதுறேன் பாரு ப்ளாக்ன்னு ஆரம்பிச்சுட்டேன் ஆனா எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல .. உஷ் இப்போவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. சரி.. மற்ற நல்ல நல்ல பதிவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு என்னுடைய முதல் பதிவை ஆரம்பிக்கிறேன்..

முதலில் எனக்கு இந்த வருடம் மிகவும் பிடித்த படமான "பசங்க" படத்தை பற்றி என்னுடைய பார்வை மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் ...


 1. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிக அருமை.. அன்புவின் பெற்றோரை பார்க்கும் போது எனக்கு சின்ன வயதில் என்னுடைய அம்மா அப்பா சண்டை போடும் போது அழுதது , படிக்காமல் பள்ளிக்கூடம் போய் அடி வாங்கியது நினைவுக்கு வந்தது... என்னை நானே பார்த்த மாதிரி இருந்தது..
 2. எனக்கு தம்பி இல்லை தங்கை மட்டும் தான் "புஜ்ஜிமா" மாதிரி அவளும் பயப்படவே மாட்டாள் எல்லாரயும் எங்க வீட்டுக்குள்ள வந்தீங்க அடிப்பேன் என்று கூறி அனைவரையும் மிரட்டுவாள்
 3. சரி என்னடா ஒரே சுய புராணமே இருக்கேன்னு பாக்குறீங்களா என்ன பண்ணுறது முதல் தடவை எப்படின்னு தெரியல...அப்புறம் பக்கடாவ பத்தி சொல்லாம விட்டுட்டா எப்படி.. எங்க வீட்டுல எப்பவும் அவனப் பத்தி தான் பேசுவோம் அவன் இல்லாட்டி அந்த படத்தில் சுவாரசியம் இருக்காது "நான் சொல்லல" "அது பேசுச்சு அது பேர் எழுதல அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணுது" என்ன மாதிரி ஒரு டயலாக் டெலிவரி சூப்பர் போங்க ..
 4. அப்புறம் நம்ம சோபி கண்ணு , மீனாட்சி காதல் ... எப்பவும் ஒரே மாதிரி லவ் சீன் ஒரே மாதிரி குத்து பாட்டு படங்களுக்கு மத்தியில் தென்றல் மாதிரி படத்துக்கு நடுவில் வரும்.. என்னோட அப்பா கூட உட்கார்ந்து நெளியாம மிகவும் சந்தோசமாக ஒரு காதல் சீன் பார்த்தது அது இதுதான் ... அதுவும் என்னுடைய கணவர் சோபி கண்ணு பைத்தியம் ... எப்போ பாத்தாலும் சோபி வர சீன் மட்டும் பாத்துகிட்டே இருப்பார்.. "சும்மா சாம்பிராணி போடாத" இப்போ எங்கள் சாதாரண டயலாக் ஆகிடுச்சு...
 5. எந்த விதமான மேக்அப் போடாத முகங்கள் பாக்க .....நாமும் அவங்கள பக்கத்துக்கு வீட்டுல இருந்து பாக்குற மாதிரி இருந்துச்சு...
 6. எனக்கு பிடித்த ஒரு முக்கியமான விஷயம்ஒரே ஒரு பாடலை தவிர மற்ற பாடல்களில் யாருமே வாய் அசைத்து பாடமாட்டார்கள் ...நிஜத்தில் நாம் யாரும் அப்படி பாடி ஆட முடியாது...பின்னால் பாடல் ஓட காட்சி மட்டுமே இருக்கும் நான் மிகவும் ரசித்தது இதுதான்...
 7. யாரையும் விட முடியாது ... எல்லாரும் அதில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கின்றனர் ... அதிலும் விளையாட்டு போட்டி சீன் இன்றும் எல்லா கிராமங்களிலும் நடப்பது... நானும் சிறு வயதில் எங்கள் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் நடக்கும் விளையாட்டு போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கிருக்கேன் (உண்மை தான் நம்பிடுங்க ..) அப்போ எனக்கு பிடிக்காத பிள்ளையை விட நிறைய பரிசு வாங்கனும்ன்னு நான் என்ன மாதிரி பயிற்சி எடுப்பேன் தெரியுமா... ம்ம் அதெல்லாம் ஒரு காலம்
 8. எல்லாமே இயல்பு என்று சொல்ல முடியாவிடிலும் மற்ற எல்லா திரைப்படங்களிலும் எவ்வளவு காட்சிகளை அதிகமான பில்ட் அப், இயல்பு மீறி டூ மச் ஆக தெரிந்தும் பார்த்து விட்டு வந்திருக்கிறோம் அதனால் இதில் வரும் சில காட்சிகளை என்னால் ஒத்துகொள்ளவே முடிந்தது
 9. முடிவில் ...எனக்கு என்னுடைய பள்ளி மற்றும் சிறு வயது நினைவுகளை அசை போட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது ..
 10. நிறைய சொல்ல நினைத்தேன் ஆனா எப்படி அதை எழுத்து வடிவில் கொண்டு வருவதென்று தெரியவில்லை .. சீக்கிரம் கற்றுக் கொள்கிறேன் ... பிழை இருந்தால் மன்னிக்கவும் ...

மிகவும் நன்றியுடன்

அருவி

10 comments:

 1. வாங்க வாங்க .... உங்க வரவு நல்வரவு ஆகட்டும்.. தொடர்ந்து எழுதுங்க, படிங்க..நான் நிச்சயம் உங்க எழுத்துக்கள தொடர்ந்து படிக்கறேன்..
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மிகவும் நன்றி அண்ணாமலையான் உங்கள் பாராட்டுக்கு ... மிகவும் கடினமாக இருந்தது ப்ளாக் எழுதுவது .. கண்டிப்பாக முயற்சி செய்து நன்றாக எழுதுகிறேன்...

  ReplyDelete
 3. இவ்வளவு தன்னடக்கம் தேவையில்லை... சித்திரமும் கைப்பழக்கம்..! நடை நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் புரொஃபைலில் இருக்கும் புலியைப் பார்த்து என்பன போன்ற நம்பிக்கை இல்லாத வார்த்தைகளை மாற்றிவிடுங்கள்... ஆல் தி பெஸ்ட்!

  ReplyDelete
 4. அட என்னங்க.. நீங்க ரொம்ப நாளா யோசிச்சு எழுதுன பதிவு இது ??? கரெக்டா???

  இனிமே அடிச்சு ஆடுங்க.. படிச்சு சொல்ல நாங்க இருக்கோம்...

  ReplyDelete
 5. அட யாரும் இன்னும் சொல்லலையாப்பா??

  சரி நானே சொல்றேன்..

  comment settings போய்..word verificationஅ எடுத்து விடுங்க...

  பின்னூட்டம் போட சிரமமா இருக்கும்...

  ReplyDelete
 6. மொதல்ல அப்டிதாங்க இருக்கும்..

  மன்னிப்பெல்லாம் கேப்பீங்க..

  போக போக பாருங்க.. அட நாம எவ்ளோ பரவாயில்ல போலன்னு தோணி நீங்க மன்னிப்பு மாங்க எல்லாம் கேக்க மாட்டீங்க...


  தொடர்ந்து கலக்கவும்.. :-) வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. வாழ்துக்கள் ,தொடர்ந்து எழுதுஙகள்

  ReplyDelete
 8. மிகவும் நன்றி முருகேஷ் சார்...நீங்க சொன்ன மாதிரி புரொஃபைலில் மாத்திட்டேன்..

  @கடைக்குட்டி , @ரேவதி சீனிவாசன்
  உங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..... நீங்க சொன்ன மாதிரி word verificationஅ எடுத்து விட்டுட்டேன் ....

  ரொம்ப நன்றி ஜான் ...

  ReplyDelete